போல்டருக்கு போட முடியுமா பாஸ்வேர்ட் பூட்டு?

போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் முடியும். (மற்ற வின்டோஸ் தொகுப்பிற்கு சில ஷேர்வேர் புரோகிராம் மூலம் பாஸ்வேர்ட் கொடுக்கலாம்) உங்கள் ஹார்ட் டிஸ்க் என்.டி.எப்.எஸ்., முறையில் பார்மட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படித்தான் செய்திருக்கப்படும். இனி எந்த போல்டரை உங்களுடையதாக மட்டும் ஆக்கிட வேண்டுமோ அதில் ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் விண்டோவில் ஷேரிங் என்ற டேபைக் கிளிக் செய்தால் “Make this folder private” என்ற பெட்டி தெரியும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் அப்ளை (Apply) என்ற பட்டனை அழுத்தவும். உங்களுடைய கம்ப்யூட்டர் அக்கவுண்டிற்கு தனியாக பாஸ்வேர்ட் இல்லை என்றால் கம்ப்யூட்டர் உங்களிடம் இந்த போல்டருக்கு பாஸ்வேர்ட் கேட்கும். பாஸ்வேர்ட் கொடுத்து உறுதி செய்தபின் “Create Password” என்ற பட்டனை அழுத்தி பின் பாஸ்வேர்ட் விண்டோவினை மூடவும். பின் புராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸில் ஓகே அழுத்தி மூடவும். இனி பாஸ்வேர்ட் தராமல், நீங்கள் உட்பட, இந்த போல்டருக்குள் நுழைய முடியாது. எனவே, நீங்களும் இந்த பாஸ்வேர்டைச் சரியாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Click Here!

Windows Vista

விண்டோஸ் விஸ்டா ஏறத்தாழ ஆறு ஆண்டுகள், 600 கோடி டாலர்கள், 5000 கம்ப்யூட்டர் புரோகிராமிங் வல்லுநர்கள் (இந்தியர்கள் 300 பேர்) எனப் பல்வேறு வகைகளில் பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் விஸ்டா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டுவிட்டது. நிறுவனங்களுக்கான பதிப்பு சென்ற டிசம்பரில் வெளியிடப்பட்டாலும் பல நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பது வியப்பான செய்தியே. தற்போது வந்திருக்கும் பொதுமக்களுக்கான விஸ்டா பதிப்பு மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் கம்ப்யூட்டரை மக்கள் விரும்பினாலும் அதற்கென தற்போது விண்டோஸ் எக்ஸ்பியுடன் வரும் கம்ப்யூட்டரின் விலைக்கு மேலாக 5% முதல் 6% வரை கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டியதிருக்கும்.

முற்றிலும் புதிய சில வசதிகள் இந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருக்கின்றன என்று பல மாதங்களுக்கு முன்னரே இப்பகுதியில் எழுதி இருந்தோம். ஹார்ட்வேர் சாதனத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஏரோ கிளாஸ் எனப்படும் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ், கூடுதலான வழிகளில் தேடி அறியும் வசதி, புதிய ஆடியோ சிஸ்டம், கூடுதல் பாதுகாப்பு போன்ற விஸ்டா தரும் வசதிகள் பெரும்பாலும் புதியனவாகத் தான் இருக்கின்றன. ஆனால் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை தங்கள் கம்ப்யூட்டரில் பதித்து இயக்க ஹார்ட்வேர் சாதனங்கள் அதற்கிணையான வகையில் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கு முன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வெளிவந்தபோது மேற்கொள்ளப்பட்ட ஹார்ட்வேர் தேவைகளைக் காட்டிலும் தற்போது கூடுதலாகவே தேவை இருக்கும் என கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்கும் எச்.பி. மற்றும் டெல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. விஸ்டா பதிந்து இயக்கக் கீழ்க்காணும் குறைந்த பட்ச அளவிலான ஹார்ட்வேர் சாதனங்களுடன் ஒரு கம்ப்யூட்டர் வடிவமைக் கப்பட்டிருக்க வேண்டும். 800 மெகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட சிப், குறைந்தது 20 கிகாபைட் காலி இடம் உள்ள ஹார்ட் டிஸ்க், குறைந்தது 128 எம்பி விடியோ ராம் கொண்ட கூடுதல் திறனுடன் கூடிய கிராபிக் கார்ட் ஆகியவை சில அடிப்படைத் தேவைகளாகும். முழுமையான அளவிலான விஸ்டா பதிப்பு ரூ.16,000 க்கும் அடிப்படை வசதிகள் மட்டும் கொண்ட விஸ்டா பதிப்பு ரூ.8,000க்கும் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் விஸ்டா சிஸ்டத்தினை எதிர்பார்த்தே அதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் தங்கள் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். எனவே இவர்கள் விண்டோஸ் விஸ்டாவிற்கு மாறிக் கொள்ள பிரச்னை இருக்காது. பழைய எக்ஸ்பி கம்ப்யூட்டர்கள் வைத்திருப்போர்கள் தங்கள் மெமரியினை கூடுதலாக்க குறைந்த அளவில் பணம் செலவழிக்க வேண்டியதிருக்கும். விண்டோஸ் விஸ்டாவின் இன்னொரு சிறப்பம்சம் இது 18 பன்னாட்டளவிலான மொழிகளில் வெளியிடப்பட்டது என்பது தான். இந்தியாவில் ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் தெலுங்கு மற்றும் மராத்தி உட்பட 13 இந்திய மொழிகளில் இது வெளியிடப்பட உள்ளது. ஹைதராபாத் நகரில் இயங்கும் மைக்ரோசாப்ட் ஆய்வு மையத்தில் 3000 வல்லுநர்கள் விண்டோஸ் விஸ்டா வடிவமைப்பில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக ரிமோட் இணைப்பு, பைல்கள் பேக்கப் மற்றும் பைல் சிஸ்டம் பயன்பாடுகள் ஆகியவற்றில் இவர்களின் திறமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான விண்டோஸ் விஸ்டா பதிப்பில் நான்கு வகைகள் வெளிவரு கின்றன. ஸ்டார்ட்டர் எடிஷன் என்று அழைக்கப்படும் பதிப்பு ரூ. 22,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பதிவதற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அடுத்த பதிப்பு வீடுகளிலும் சிறிய அலுவலகங்களிலும் பயன்படுத்தவதற்கென உருவாக்கப்பட்ட ஹோம் பேசிக் வகை ஆகும். மூன்றாவதாக உள்ள ஹோம் பிரிமியம் எடிஷன் இதற்கு முன் உள்ள மல்ட்டி மீடியா சென்டர் எடிஷன் போல மல்ட்டி மீடியா வசதிகள் கொண்டது ஆகும். நான்கா வதாக உள்ள மல்ட்டி மீடியா அல்டிமேட் என்னும் பதிப்பில் ஹோம் வகைப் பதிப்பில் உள்ள வசதிகளுடன் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுக்கான வசதிகளும் வர்த்தக நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளும் இணைக்கப்பட்டு இயங்குகின்றன. விண்டோஸ் விஸ்டா பதிப்புடன் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பதிப்பும் ஜனவரி 30 அன்று அனைத்து நாடுகளிலும் வெளியிடப்பட்டது.

மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி பால்மர் விஸ்டா பற்றி குறிப்பிடுகையில் இன்னும் மூன்று மாதங்களில் விண்டோஸ் 95 தொகுப்பு முன்பு விற்பனையானதைக் காட்டிலும் ஐந்து மடங்கு கூடுதலாக விஸ்டா விற்பனையாகும் என்று குறிப்பிட்டார்.

விஸ்டா – இதுவரை தெரிந்த புதுமைகளும் வசதிகளும் 1. கம்ப்யூட்டரில் புதிய ஹார்ட் டிஸ்க்கை நிறுவுகையில் அதற்கான டிரைவரை முதலில் பதித்த பின்னரே அதில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதித்து வந்தோம். எடுத்துக் காட்டாக தற்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சடா (SATA) வகை ஹார்ட் டிஸ்க்குகளை அப்படித்தான் பதிக்கிறோம். விண்டோஸ் விஸ்டாவைப் பொறுத்த வரை இது தேவையில்லை. ஆப்பரேட்டிங் சிஸ்டமே ஹார்ட் டிஸ்க்கைப் புரிந்து கொண்டு அதற்கான டிரைவர்களை வைத்துக் கொண்டு இயங்குகிறது. 2. விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ள டிவிடி டிஸ்க்கை வைத்து அதனைக் கம்ப்யூட்டரில் பதியும் போது ஏதேனும் காரணங்களால் கம்ப்யூட்டர் இயங்காமல் போனாலோ அல்லது மின் சக்தி வழங்குவது நின்று போனாலோ மீண்டும் முதலில் இருந்து பதிவு வேலையைத் தொடங்க வேண்டியதில்லை. மறுபடியும் விஸ்டா டிவிடியைப் போட்டவுடன் தானாக விட்ட இடத்தை அறிந்து கொண்டு அங்கிருந்து தொடங்கி முடித்து விடும். இதில் பிரச்னை ஏற்பட்டால் தான் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.3. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஒரு பைலைத் தேடுகிறீர்கள். நாள் வாரியாக அல்லது பேர் வாரியாகத் தேடி ஒரு வழியாகக் கண்டு பிடிக்கிறீர்கள். பின் பைலைப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் எப்படி தேடினோம் என்பதனையும் தேடும்போது அதே பெயரில் பெற்ற பிற வகை பைல்கள் என்ன என்ன என்பதனையும் மறந்துவிடுகிறீர்கள். இன்னொரு நாளில் “அடடா அதனைக் குறித்து வைக்க மறந்துவிட்டோமே” என்று ஆதங்கப்படுகிறீர்கள். விஸ்டா இதற்கெல்லாம் வழி தருகிறது. உங்களின் ஒவ்வொரு தேடலையும்

\Searches\folder என்னும் போல்டரில் பதிந்து வைக்கிறது. ஏதேனும் ஒரு தேடலை மீண்டும் தொடங்கினால் அதனை அப்போது அப்டேட் செய்கிறது. இது பல வழிகளில் நமக்கு உதவுகிறது. 4. இப்போது சிஸ்டம் டிரேயில் ஒரு கடிகாரம் இருக்கிறது. நம்மில் பலருக்கும் நண்பர்கள், உறவினர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது சிங்கப்பூரில் அல்லது அமெரிக்காவில் என்ன நேரம் இருக்கும் என்று நமக்குள் கேட்டுப் பார்க்கிறோம். பின் கணக்குப் போட்டு கண்டு பிடிக்கிறோம். இதெல்லாம் விஸ்டாவில் தேவையில்லை. சிஸ்டம் டிரேயில் ஒன்றுக்கு மேற்பட்ட கடிகாரங்களை வைத்துக் கொள்ளலாம். நம் பிரியமானவர்கள் அல்லது தொழில் நண்பர்கள் இருக்கும் நாடுகளின் நேரத்தை ஒவ்வொன்றிலும் போட்டு வைத்து அறிந்து கொள்ளலாம்.5. விளையாட்டுப் பிரியர்களுக்கு நல்ல வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. விளையாட்டு ஒன்றினை விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். பாதியில் வேறு வேலை இருக்கிறது. இந்த விளையாட்டைப் பாதியில் சேமித்து வைத்து பின் தொடர சில விளையாட்டுக்களில் வசதி உள்ளது. அப்படி எக்ஸ்பியில் நீங்கள் இடையே விட்டுப் போன விளையாட்டுக்களை விஸ்டாவிற்குக் கொண்டு வந்து தொடரலாம். விஸ்டாவில் இயங்கும் விளையாட்டுக்களையும் இதே போல தொடரலாம். Saved Games என்ற போல்டரில் இவை தங்குகின்றன. விஸ்டா தரும் Games போல்டர் என்பதுவும் விளையாட்டுப் பிரியர்களுக்கு வசதியான ஒன்று. கேம்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்தும் இதில் தங்குகின்றன. இதிலிருந்து விளையாட்டுக்களை இயக்கலாம். விளையாட்டுக்களுக்கெனத் தரப்படும் பேட்ச் பைல்களை இணைக்கலாம். குழந்தைகள் விளையாடாமல் இருக்க தடைகளை உருவாக்கலாம். 6. வழக்கமான டெக்ஸ்ட் மற்றும் டாகுமென்ட் பைல்களுக்குப் பதிலாக பைல்களை அதிக பாதுகாப்புள்ள எக்ஸ்.எம்.எல். வகையில் பதிந்து கொள்ளலாம். இதற்கு வேர்ட் பிராசசரில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிப் பின் பிரிண்ட் கட்டளை கொடுத்து அதில் கிடைக்கும் ஆப்ஷன்களில் XML printer என்பதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்து கொள்ள வேண்டும். 7. விண்டோஸ் விஸ்டாவின் முழு பயனையும் நீங்கள் பெற பல தளங்களில் Tweak புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சில : Tweak VI என்னும் புரோகிராமை www.totalidea.com என்னும் தளத்திலிருந்தும் TweakVista என்னும் புரோகிராமை www.tweakvista.com/tweakvistautility என்னும் தளத்திலிருந்தும் இறக்கி, இயக்கிப் பயன்படுத்தலாம். இவற்றுடன் ஙடிண்tச்ஆணிணிtககீO என்றும் ஒரு புரோகிராம் www.vistabootpro.org என்ற தளத்தில் கிடைக்கிறது. இதுவும் சிறப்பாக விஸ்டாவின் வசதிகளைப் பயன்படுத்த துணை செய்கிறது. இன்னொன்றையும் இங்கு நினைவு படுத்த வேண்டும். Windows ReadyBoost என்ற புரோகிராம் மூலம் கழட்டி எடுத்துச் செல்லக் கூடிய பிளாஷ் மெமரியைக் கம்ப்யூட்டரின் மெமரியாகப் பயன்படுத்தலாம். 8. மிக முக்கியமான மற்றும் அதிக வசதி கொண்ட பிரிவு விண்டோஸ் எக்ஸ்புளோரர் ஆகும். விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களை வரிசைப் படுத்த பெயர், சைஸ், வகை, திருத்தப்பட்ட தேதி, உருவாக்கப்பட்ட தேதி (Name, Size) எனப் பல வகைகளைப் பயன்படுத்துகிறோம். விண்டோஸ் எக்ஸ்பியில் இது போல 45 வகைகளைப் பயன்படுத்தலாம். ஆனால் விண்டோஸ் விஸ்டாவில் 250 வகைகள் உள்ளன. இவற்றால் பைல்களைத் தேடி அறிவது மிக மிக எளிதாகிறது.விண்டோஸ் விஸ்டா கேள்விகளும் பதில்களும்

விண்டோஸ் விஸ்டா என்பது என்ன? மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்குவதற்கு வழங்கப்படும் இன்றைய ஆப்பரேட்டிங் சிஸ்டம். இது கடந்த ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சியின் விளைவாக பொது மக்களுக்குச் சென்ற ஜனவரி 30ல் கிடைத்துள்ளது.  

விஸ்டாவில் விண்டோஸ் எக்ஸ்பியில் இல்லாதது என்ன உள்ளது?

விண்டோஸ் எக்ஸ்பியைக் காட்டிலும் விஸ்டா கூடுதல் திறனுடன் அதிகப் பாதுகாப்புடனும் பல புதிய வசதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சீராகவும் விரைவாகவும் தேடும் வசதி, ஏரோ என்ற யூசர் வசதி இதில் குறிப்பிடத்தக்கன. கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் விஸ்டாவில் என்ன இருக்கிறது?  

அவ்வப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் புதிய செக்யூரிட்டி தடுப்புகளை விஸ்டா தானாகவே அப்டேட் செய்து கொள்ளும். இதில் புதியதாக பயர்வால்என்றுசொல்லப்படும் வைரஸ் தடுப்பு சுவர் தரும் புரோகிராம் போன்று செயல்படும் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. விண்டோஸ் டிபண்டர் என்ற ஒரு வசதி கம்ப்யூட்டர்களை ஸ்பைவேர் மற்றும் பிற தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புகளிலிருந்து தடுக்கிறது. மேலும் “Malicious Software Removal Tool” என்ற ஒரு விஸ்டா சாதனம் குறிப்பிட்ட காலத்தில் அதுவாகவே தேவையற்ற புரோகிராம்கள் மற்றும் வைரஸ்கள் உங்கள் கம்ப்யூட்டர்களை வந்தடைந்துள்ளனவா என்று பார்த்து தடுக்கும் மற்றும் அழிக்கும்.

விஸ்டாவில் வைரஸ் தடுப்பு வசதிகள் இருப்பதனால் விஸ்டா போட்டபின்பு தற்போது நான் பயன்படுத்தும் ஆன்டி வைரஸ் தொகுப்பு தேவைப்படுமா?

ஆம். மைக்ரோசாப்ட் நிறுவனமே இதனைச் சொல்லியுள்ளது. ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் என அழைக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழிப்பு சாப்ட்வேர் தடுப்பு புரோகிராம்களை போட்டு வைக்க வேண்டும். அப்போதுதான் வைரஸ்களுக்கு எதிராகப் பல அடுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.என்னுடைய பழைய சாப்ட்வேர் தொகுப்புகள், பிரிண்டர் போன்ற சாதனங்கள் விஸ்டாவுடன் இயங்குமா?

பழைய சாப்ட்வேர் தொகுப்புகள் இயங்கும் வகையில் தான் விஸ்டா தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. துணை சாதனங்களை (பிரிண்டர், ஸ்கேனர் போன்றவை) தயாரிப்பவர்கள் விஸ்டாவுடன் இயங்கும் வகையிலேயே சாதனங்களைத் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். சில பழைய மாடல் சாதனங்களுக்கு புதிய டிரைவர்கள் தேவைப்படலாம். இவற்றை மைக்ரோசாப்ட் அல்லது அந்த சாதனங்களைத் தயாரித்து வழங்கிய நிறுவனங்களின் இணைய தளங்களிலிருந்து இலவசமாக இறக்கிப் பதிந்து பயன்படுத்தலாம். விண்டோஸ் விஸ்டாவினை விலை கொடுத்து வாங்குவது அந்த செலவிற்கு ஈடான பலனைத் தருமா? அல்லது பழைய விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்புடன் பொழுதை ஓட்டி விடலாமா?

மிக மிக முக்கியமான கேள்வி. உங்களுடைய கம்ப்யூட்டர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டதாக இருந்ததால் விண்டோஸ் விஸ்டா பக்கம் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் விஸ்டா இயங்க உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட்வேரினை அப்கிரேட் செய்திட அதிகம் செலவாகும். ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் கம்ப்யூட்டர் வாங்கியவர்கள் தாராளமாக விஸ்டாவிற்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம். மிகவும் உற்சாகமாக விஸ்டா இயக்க எண்ணினால், இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ கிடைக்கும் விஸ்டாவுடன் இணைந்து செயலாற்றும் பல சாப்ட்வேர் புரோகிராம்களைப் பெற்று இயக்கலாம்.விண்டோஸ் விஸ்டா வாங்கிட எளிய வழி எது?

விண்டோஸ் விஸ்டா பதித்தவாறே வழங்கப்படும் புதிய கம்ப்யூட்டர் ஒன்றை வாங்குவதே சிறந்தது. உங்கள் கம்ப்யூட்டர் நிச்சயம் விஸ்டா இயங்குவதற்குத் தேவையான குறைந்த பட்ச அமைப்புகளுக்கு மேலாகவே இருக்கும். விஸ்டாவிற்கான குறைந்த பட்ச தேவை என்பது என்ன?

உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் குறைந்த பட்சம் 800 மெகா ஹெர்ட்ஸ் புராசசர் இருக்க வேண்டும். 800 து 600 ரெசல்யூசன் தரக்கூடிய கிராபிக் சிப், குறைந்தது 512 எம்பி சிஸ்டம் மெமரி மற்றும் ஹார்ட் டிஸ்க்கில் 15 ஜிபி காலி இடம். என்னுடைய கம்ப்யூட்டர் விஸ்டாவை ஏற்றுக் கொள்ளும் என்று விஸ்டா பதியாமலேயே கண்டு பிடிக்க இயலுமா? முடியும். Windows Vista Upgrade Advisor என்று ஒரு புரோகிராமினை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் இணைய தளத்தில் தந்துள்ளது. இது இலவசம் தான். இந்த புரோகிராம் உங்களுடைய கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து உங்கள் கம்ப்யூட்டர் விஸ்டாவை ஏற்றுக் கொள்ளுமா? இல்லையா? என்றும் அப்படி ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் எந்த பதிப்பு சரியாக இருக்கும் என்றும் அறிவிக்கும். இந்த புரோகிராம் விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 98 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்காது. இந்த புரோகிராம் உங்களுடைய புராசசர், கிராபிக்ஸ் கார்ட், சிஸ்டம் மெமரி ஆகியவை குறித்த ரிப்போர்ட் அளிப்பதுடன் ஸ்கேனர், வெப்கேமரா, மானிட்டர் மற்றும் பிரிண்டர் ஆகிய சாதனங்கள் இயங்குமா என்பதனையும் தெரிவிக்கும். அத்துடன் சில புரோகிராம்கள் மீண்டும் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தெரிவிக்கிறது.

விஸ்டாவில் எத்தனை வகை உள்ளன? விஸ்டா தொகுப்பு நான்கு வகையில் வந்துள்ளது. அவை Home Basic, Home Premium, Business and Ultimate editions ஆகும். ஹோம் பேசிக் வகையில் முப்பரிமாணத்தில் இயங்கும் ஏரோ டெஸ்க் டாப் (Aero desktop) கிடைக்காது. விண்டோஸ் மீடியா சென்டர் சாப்ட்வேரும் இதனுடன் இருக்காது. இது பிரிமியம் மற்றும் அல்டிமேட் பதிப்புடன் கிடைக்கிறது. அல்டிமேட் தொகுப்பில் மிகச் சிறந்த வசதி ஒன்று உள்ளது. அது Bitlocker Drive Encryption ஆகும். இது கம்ப்யூட்டரில் உள்ள டேட்டா திருடப்படுவதனையும் காணாமல் போவதையும் தடுக்க சிறந்த வழியினைத் தருகிறது. ஆங்கிலத்தில் படிக்க : http://www.microsoft.com/windows/products/windowsvista/default.mspx

Useful Tips….

Quick web address

Type the name of a web site such as ‘myspace’ into your browser’s address bar and press CTRL+Enter to automatically add http://www and .com and be taken to the site.

Save a web page picture

To copy a picture from a web site on to your computer, right-click the image and select Save Image As or Save Picture As.

Move between web links

Use Tab and Shift+Tab to move between links on a web page and press Enter to follow the selected link.

Change the clock

Double click on the clock on the Taskbar to change the time and date shown.

Save web video clips

To download video clips embedded on a web page, in Firefox right-click the page and select View Page Info then click the Media tab. Select the video file and click Save As.

Check hard disk space

Double click on the My Computer icon on your Desktop and right-click on your hard disk (usually drive C). Click Properties to see the amount of disk space left on your computer.

Create a web shortcut

Right-click on a web page in your browser and select Create Shortcut to place a shortcut link on your desktop.

Change how you view file lists

You can change how your files are shown in a folder by clicking on View then choosing between Thumbnails, Tiles, Icons, List or Details.

Create Taskbar shortcuts

Drag a file, folder or shortcut on to the Taskbar for quick access to programs, files or web sites.

Change Desktop background

Right click on your Desktop and select Properties. Click on the Desktop tab, pick a new Background and click Apply to change your wallpaper.

Take a screen snapshot

Press Print Screen to take a snapshot of the whole screen or ALT and Print Screen for just the current window, then paste it into an image editor such as Paint to save it as a picture file.

Make web pages easier to read

To make text on web pages easier to read, click on View (or Page in Internet Explorer7) then Text Size and choose a larger size.

Use BCC

To send an e-mail to several people at once without showing all their addresses at the top of the e-mail, use the BCC (Blind Carbon Copy) box in your e-mail client.

Burning CDs/DVDs

When writing a CD or DVD leave your PC alone, as using other programs at the same time could interfere with the burning process.

Alter music speed

In Windows Media Player, click the View menu then Enhancements and Play Speed Settings. Move the slider to speed up or slow down a song.

Picture slideshow

Open a folder of pictures and from the Explorer menu on the left click Picture Tasks and then View as a slideshow.

Change volume

Change your speaker volume by clicking on the Start menu and Control Panel, then click Sounds and Audio Devices to change your sound settings.

Open compressed files

In Windows XP, open compressed Zip files by double-clicking them. Click and drag the files inside out to another folder or the Desktop to extract them.  

ஆன்லைன் தமிழர்கள் மொத்தம் எத்தனை பேர்?

இன்றைய நிலையில் உலகெங்கும் எத்தனை ஆன்லைன் தமிழர்கள் இருக்க முடியும்? அந்த அபூர்வ எண்கள் நமக்கு கிடைக்க கிடக்கிறதா?.பார்க்கலாம்.உலகளாவிய தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 80 மில்லியன் என்கிறார்கள்.இவர்களில் எத்தனை பேர் ஆன்லைன் உலகில் வருகிறார்கள்?

இந்திய அளவில் 2007 மார்ச்சில் 33 மில்லியனாக இருந்த வலைமக்கள் தொகை இந்த செப்டம்பரில் 37 மில்லியனாக எம்பியிருக்கிறது என்கிறது IAMAI -The Internet and Mobile Association of India-வின் சர்வே.

இது அடுத்த மார்ச்சில் 42 மில்லியனாகவும்,2008 மார்ச்சில் 54 மில்லியனாகவும் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சிறு நகர ,குறு நகர வலைமக்களின் எண்ணிக்கை 142 சதவீதமாக ஏறி இருப்பது தான்.அநேகமான சீக்கிரமாக அரசு சார்ந்த சேவைகள் ஆன்லைன் ஆகும்போது இந்த எண்ணிக்கை இன்னும் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.பழைய email, chat மற்றும் IM -வோடு புது blogs, P2P, video on demand and online gaming-சேர்ந்து நம்மூர் வலை பயன்பாடு சீக்கிரத்தில் களை கட்டப்போகிறது என நம்பலாம்.

இப்போதைக்கு அமெரிக்க வலைமக்கள் தான் மிக அதிகமாம் 153 மில்லியன்.அதை தொடர்ந்து சீனா,ஜப்பான்,ஜெர்மனி வருகிறார்கள்.

இனி தமிழுக்கு வருவோம்.எனக்கு தெரிந்து இப்போதைக்கு தமிழில் முதலிடத்தில் இருக்கும் வலையகம் தினமலர்.காம் dinamalar.com அலெக்ஸா தரத்தில் 66-வது இடம்.( ஈநாடு eenadu.net தெலுங்கு நாளேடு 52 வது இடத்திலும்-அதிக வெளிநாடு வாழ் ஆந்திரைட்ஸ் காரணமோ? ,மசாலா Debonairblog.com 14 வது இடத்திலும்-நம்ம மக்களின் மசாலா ரசனை காரணமோ? உள்ளது குறிப்பிட தக்கது).
தினமலர்.காம் சொல்லும் எண்கள் தினம் 3 லட்சம் பார்வையாளர்கள்.http://www.dinamalar.com/webtariff.htmசில தமிழ் வலையகங்களை மேய்ந்தபோது தினம் 1000 தாண்டும்.வலைபூக்கள் நிலை 100 களில்.
வலைபதிவோர்காக வலைபதிவர்களை கொண்டு வலைபதிக்கப்படுதல் தான் இன்றைய தமிழ் “வலைநாயக” நிலை.

ஆனாலும் சில ஆச்சர்ய புள்ளி விவரங்களில் தமிழ் வலைபதிவு உலகம் இந்திய அளவில் முன்னுக்கு நிற்கிறது புலனாகிறது.
எடுத்து காட்டாக http://india.blogstreet.com/directory.html#City பார்வையிட்டால் சென்னை இந்திய வலைபதிவு உலகில் முந்தி நிற்கிறது
“தமிழ் blog” மற்றும் “हिन्दी blog” கூகிள் தேடலில் தமிழ் எண்கள் முந்தி நிற்கிறது.என் கணிப்பு அநேக இந்திகாரர்கள் ஆங்கிலத்தில் எழுதி காசு பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான்.என்னவாயினும் இது வரை தமிழில் வலை பதிவோர்,ஒன்றில் எதோவொரு வெறியில் (? )எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.தமிழ் பற்றாய் (அல்லது வேறு பற்று)கூட இருக்கலாம் அல்லது நேரப்போக்குகாக (I mean hobby) எழுதிக்கொண்டிருக்கலாம்.

சன் டிவி தமிழர்கள் -அதாவது பேச,புரிய தெரியும்-படிக்க தெரியாத புது வகை தமிழர்களை நாம் இக்கணக்கில் exclude பண்ணியாகவேண்டும்.

3 லட்சம் பேரில் 100 பேர்தான் வலைப்பூ பக்கம் வருகிறார்கள் என்றால் எங்கிருக்கிறது ஓட்டை?

தமிழ் பாட்கேஸ்டிங்

வழக்கமான ஆன்லைன் ரேடியோ போலல்லாது எப்போது வேண்டுமானாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டு மகிழ தோன்றியிருப்பவை தான் பாட்காஸ்டிங் எனப்படும் ஒலி கோப்புகளின் அணிவகுப்பு.ஆப்பிள் ஐபாடிலிருந்து உண்டான பெயர்.இது ஒருவர் உருவாக்கிய பாடலாக இருக்கலாம் அல்லது நகைசுவை,குறு நாடகம்,இசை,செய்தி,தகவல் ஏன் பிரசாரமாகக் கூட இருக்கலாம்.No rules No regulations.பெரும்பாலும் MP3 வடிவத்தில் காணலாம்.

பாட்காஸ்டிங் செய்ய என்ன வேண்டும்?முதலில் ஒரு மைக்ரோ போன் வேண்டும்.உங்கள் கணிணியில் ஏற்கனவே அமந்துள்ள மைக்ரோபோனை உபயோகபடுத்தினாலும் Audio Technica 3035 Microphone அல்லது Edirol R-9 போன்ற மைக்ரோ போன் நல்ல தரமான ஒலிப் பதிவை தரும்.
அப்புறமாய் ஒலி கோப்புகளோடு விளையாட அதாவது record audio, edit MP3 files, cut, copy, splice மற்றும் mix sounds செய்ய இலவச மென்பொருள் Audacity இங்கிருந்து இறக்கம் செய்து கொள்ளலாம் http://audacity.sourceforge.net.மிக உயர்தர எடிட்டிங்கு-க்கு Sound Forge Audio Studio software-ஐ முயலலாம்.

உங்கள் பாட்காஸ்டிங்கில் கலந்து வழங்க இனிய இசைகளை இங்கிருந்து இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.காப்பிரைட் பற்றி பயப்பட தேவையில்லை.
http://music.podshow.com
http://www.podsafeaudio.com
http://www.audiofeeds.org

சொற்பொழிவு பாட்காஸ்டிங்கு bit rate 48 – 56k Mono வாகவும் இசை பாட்காஸ்டிங்கு 63 – 96k Stereo-வும் வைத்தல் தகும்.உயர் bit rate (around 160kbps) இசை பாடல்களுக்கு நல்லது.வசன பாட்காஸ்டிங்களுக்கு நல்லதல்ல.முடிந்தவரை சிறிய அளவு கோப்பாக இருத்தல் நலம்.எனில் பயனர் இறக்கம் செய்ய எளிது.

ID3 tag-ல் உங்களின் பெயர்,தலைப்பு,வகை குறித்து கொள்ளவும்.தேடல் மற்றும் உங்களை பற்றி அறிதல் எளிதாகும்.
அவ்ளோதான் ஒலிவலைப்பூ-வில் அதாங்க ஆடியோ பிளாகில் போட உங்கள் பாட்காஸ்டிங் ரெடி!!

உதாரணமாய் இங்கே பாருங்கள் தமிழ் பாட்காஸ்ட்களின் அணிவகுப்பை

http://odeo.com/tag/tamil

http://search.singingfish.com/sfw/home.jsp

இலவச தமிழ் மென்நூல்கள்

மதுரைத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் மின்பதிப்புகள்-
அகர வரிசைப் பட்டியல்
http://www.tamil.net/projectmadurai

தமிழ் நூலகம் தமிழ் மென்நூல்கள்
http://www.chennailibrary.com/ebooks

தமிழ்மன்றம்.காம் தமிழ் மின் புத்தகங்கள்
http://www.tamilmantram.com

நூலகம் திட்டம்
இந்நூலகம் திட்டத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களே வெளியிடப்படுகின்றன.
http://www.noolaham.net/library

தமிழ் கதைகள்
http://www.maraththadi.com

சில தமிழ் எழுத்தாளர்களின் பக்கங்கள்
சுஜாதா http://www.writersujatha.com
சாரு நிவேதிதா http://www.charuonline.com
சிவசங்கரி http://www.sivasankari.com
சத்யராஜ்குமார் http://www.sathyarajkumar.com

egroups.com tamil-ulagam -ன் 74 பக்க ஆங்கில தமிழ் அகராதியை இங்கே இறக்கம் செய்யலாம்.
Download English Tamil dictonary
http://www.pkp.in/info/downloads/englishtamildictionary.pdf

அதிர வைக்கும் ஆர்குட்

இணைய உலகில் இன்று தூரம் என்பது வெறும் வார்த்தையாகிவிட்டது. ‘போனதும் லெட்டர் போடுப்பா’ என்பதெல்லாம் கி.மு காலத்துக் கலைச் சொற்கள் போல அருங்காட்சியகத்துக்குச் சொந்தமாகி விட்டன. இப்போதெல்லாம் மெயிலனுப்புப்பா என்றோ, சாட் பண்றேன் என்றோ, ஆர்குட்ல சந்திப்போம் என்றோ தான் பெரும்பாலும் உரையாடல்கள் நிகழ்கின்றன.செல்போன்ல பேசறேன் என்பது குறைந்த பட்ச வசதி என்றாகிவிட்டது. இணையத்தில் வரும் வளர்ச்சி தினம்தோறும் புதிது புதிதாய் எதையேனும் பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு இணைய உலகில், அதுவும் நட்பு வட்டாரத்துடன் இயங்க விரும்பும் அனைவருக்கும், அதிலும் குறிப்பாக இளையவர்களின் உயிர்மூச்சாக இருக்கிறது இந்த ஆர்குட்.

ஆர்குட் வேறொன்றுமில்லை. ஒரு மென்பொருள். தகவல் தொடர்புக்காகவும், நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும் பயன்படக் கூடிய ஒரு மென்பொருள். மின்னஞ்சலையும், இணைய அரட்டையையும், இணைய குழுக்களையும், தனி நபர் தளங்களையும் ஒரே இடத்தில் இணைத்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்தால் அங்கே ஆர்குட் தெரியும்.

கூகிளில் பணிபுரியும் ‘ஆர்குட் பியூகோட்டன்’ என்பவர் உருவாக்கிய இந்த இணையத்தில் இயங்கும் இணைக்கும் வலை அவருடைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஏற்கனவே ஃப்ரண்ட்ஸ்டர், மை ஸ்பேஸ், கசாக், ஹை-5 என்றெல்லாம் ஏராளம் ‘நெட்வர்க்கிங்’ தளங்கள் இயங்கினாலும் ஆர்குட் தன்னுடைய எளிமைக்காகவும், வசீகரத்துக்காகவும் வென்றிருக்கிறது.

ஆர்குட்டில் ஒருவர் தன்னுடைய தகவல்களை எழுதி இணையும் போது,  ஆர்குட்டில் இருக்கும் மற்ற நபர்களுடன் இணைவதற்கான வாய்ப்பு உருவாகிறது. இணைந்த நண்பர் இன்னொருவருக்கு அழைப்பு விடுக்க, அவரும் இணைய, அவர் இன்னொருவருக்கு அழைப்பு விடுக்க என இந்த சங்கிலி விரிவடைந்து கொண்டே செல்லும் போது பலர் ஆர்குட் டில் இணைகிறார்கள்.

இணைந்தவர்கள் தங்கள் ‘நண்பர் குழு’ வில் சேருமாறு பரிச்சயமான நபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். அழைப்பு உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அழைக்கப்பட்டவர் அழைத்தவரிடம் இணைகிறார்.

இப்படி சிறு சிறு நண்பர் வட்டாரங்கள் உருவாகும் போது ஒரு நண்பர் தன்னுடைய குழுவில் இருக்கும் இன்னொரு நண்பருடைய குழுவில் இருப்பவர்களுடனோ, அவருடைய நண்பருடைய நண்பரின் குழுவில் இருப்பவருடனோ பரிச்சயமாவதற்கு மிக எளிய வாய்ப்பு உருவாகி விடுகிறது. இந்த வசதி தான் இன்றைய இளையவர்களைக் கவர்ந்து இழுக்கிறது.

கல்லூரி காலத்தில் உயிருக்கு உயிராய் பழகி பல்வேறு இடங்களுக்குச் சென்றிருக்கும் நண்பர்கள் பலர் எதேர்ச்சையாக இங்கே சந்தித்துக் கொள்ளும் போது கிடைக்கும் சுகம் அலாதியானது. இன்றைய தேதியில் கல்லூரியிலிருந்து வெளிவரும் போது மாணவர்கள் பட்டத்துடன் வருகிறார்களோ இல்லையோ ஆர்குட்டில் உறுப்பினராகி, நண்பர் குழு அமைத்துவிட்டுத் தான் வெளியே வருகிறார்கள்.

தேடல் வசதியையும் இந்த தளம் எளிதாக்கித் தருவதால் பழைய நண்பர்களின் பெயரோ, ஊரோ, பிறந்த நாளோ அல்லது தெரிந்த ஏதேனும் பிற தகவல்களையோ போட்டு அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது ஆர்குட்டில் சுலபம். அந்த நண்பர் ஆர்குட்டில் சேராமல் இருந்தாலோ, அல்லது பொய்யான தகவல்களைக் கொடுத்து இணைந்திருந்தாலோ மட்டுமே கண்டு பிடித்தல் சாத்தியமில்லை.

2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தியதி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்குட் முதலில் ஆமை வேகத்தில் நகர்ந்தது. காரணம் இந்த ஆர்குட்டில் இணைய வேண்டுமானால் முன்பே இணைந்த ஏதேனும் நபர்களுடைய அழைப்பு வேண்டும் என்னும் நிபந்தனை. கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்த இந்த குழு ஜூலையில் ஒரு இலட்சம் உறுப்பினர்கள் என்னும் எல்லையை எட்டியது, செப்டம்பரில் அது இரண்டு மடங்கானது.

கடந்த 2006 நவம்பர் ஏழாம் தியதி நிலவரப்படி ஆர்குட்டில் 31,795,208 பேர் உறுப்பினர்கள் இருக்கிறார்கள், நீங்கள் இதை வாசிக்கும் போது இன்னும் பல இலட்சம் உறுப்பினர்கள் அதிகமாய் இருப்பார்கள். இன்சர்கிள் என்னும் நிறுவனம் தங்கள் சிந்தனையை ஆர்குட் காப்பியடித்திருப்பதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது. அதற்கு அந்நிறுவனம் தரும் ஆதாரம் இன்சர்க்கிளில் இருக்கும் ஒன்பது பிழைகள் ஆர்குட்டிலும் இருப்பது தான் !

பல இணைய குழுக்கள் ஆர்குட் உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது. இலக்கியம் சார்ந்த குழுக்கள், சினிமா சார்ந்த குழுக்கள், கல்வி சார்ந்த குழுக்கள், சமயம் சார்ந்த குழுக்கள் ஏன் சாதி சார்ந்த குழுக்கள் கூட ஏராளமாய் இங்கே இயங்குகின்றன. நான்கைந்து ஒத்த ரசனையுடைய நண்பர்கள் இணையும் போது அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு குழுவை ஆரம்பிக்க இதில் ஓரிரு நிமிடங்கள் போதுமானது.
 
ஸ்க்ராப் எனப்படும் ஒரு பக்கம் ஒவ்வொரு உறுப்பினருடைய தளத்திலும் இருக்கிறது. இங்கே நண்பர்கள் அரட்டை அடிக்கிறார்கள். இந்த அரட்டைகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பது ஆர்குட்டில் சிறப்புச் செய்தி.

அதற்காகவே மிகவும் கவனத்துடன் உரையாடல்கள் இங்கே நிகழும், அப்படியும் மீறி ஜொள்ளு வடிக்கும் இளையவர்களை உண்டு இல்லை என்று கலாட்டா பண்ணவே கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது ‘கெத்து தான் ஆம்பளைக்குச் சொத்து’ என்னும் குழு ஒன்று. யாராவது எங்காவது எதிர் பாலினரிடம் வழியும் போது அந்த அரட்டைப் பகுதியை அப்படியே எடுத்துப் போட்டு ‘கலாய்ப்பது’ இந்த குழுவினரின் தலையாய கடமை ! இப்படி இளைஞர்களை சுண்டி இழுக்கும் பல வசீகரங்கள் ஆர்குட்டில் விரவிக் கிடக்கின்றன.

எல்லா இணைய குழுக்களுக்கும் உள்ள குழாயடிச் சண்டைகள் இங்கேயும் உண்டு. வைரமுத்துவா வாலியா, ரஜினியா கமலா, ஐயரா ஐயங்காரா, தமிழனா மலையாளியா, இந்தியனா இந்தியாவை வெறுப்பவனா ? என்று ஆயிரக்கணக்கான குடுமிச் சண்டைக் குழுக்கள் ஆர்குட்டில் இயங்குகின்றன. ஆக்கப்பூர்வமான உரையாடல்களுக்காக இல்லாமல் பொழுதைப் போக்குவதற்காகவே பெரும்பாலான குழுக்கள் இயங்குகின்றன.

எல்லா வினைக்கும் அதற்குச் சமமான எதிர் வினை உண்டு என்னும் நீயூட்டனின் விதியை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் விதமாக வசீகரத்துடனும், நண்பர்களை இணைக்கும் பாலமாகவும் விளங்கும் ஆர்குட்டில் பல தில்லு முல்லு வேலைகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆர்குட்டில் பாலர் பாலியல் தகவல்களும், வெறுப்பை உருவாக்கும் உரையாடல்களும் அதிகம் உலவுவதாகவும் எனவே ஆர்குட் பயன்பாட்டாளர்களின் தகவல்களை அனைத்தையும் கூகிள் நிறுவனம் தங்களுக்கு வழங்கவேண்டும் என்று பிரேசில் அரசு கடந்த ஆகஸ்ட் 22ம் தியதி உத்தரவிட்டது. ஆர்குட் அதை மறுத்து, தங்களிடம் உள்ள தகவல்களைத் தரமுடியாது எனவும், ஆர்குட் தகவல்கள் அமெரிக்காவை மையமாகக் கொண்டிருப்பதால் பிரேசில் அரசு தங்களுக்கு உத்தரவிட முடியாது எனவும் கூறி எதிர் வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது.

கடந்த அக்டோ பர் பத்தாம் தியதி ஆர்குட்டில் உள்ள ‘நாங்கள் இந்தியாவை வெறுக்கிறோம்’ என்னும் குழுவிற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றம் கூகிள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த தேசியக் கொடி எரியும் புகைப்படங்கள் பெரிய சர்ச்சையை உருவாக்கின. இந்த குழுவுக்கு எதிராக ‘இந்தியாவை வெறுப்பவர்களை நாங்கள் வெறுக்கிறோம்’ என்னும் புதிய குழு ஒன்று துவங்கப்பட்டது !

இந்தியாவில் தானே என்னுமிடத்தில் பத்தொன்பது வயதான கல்லூரி மாணவன் ஒருவன் தன்னுடைய கல்லூரி மாணவி ஒருவரின் புகைப்படத்துடனும், செல்பேசி எண்ணுடனும் ஆர்குட்டில் ஒரு கணக்கைப் பதிவு செய்து ஆபாச வார்த்தைகளும் அரங்கேற்றிய நிகழ்ச்சி இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செயலுக்காக அவனுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படலாம் என்பது தற்போதைய நிலை.

இதே போல பல குற்றங்கள் ஆர்குட்டில் நிகழ்கின்றன, ஆனால் அவை எதுவும் வழக்காகப் பதிவு செய்யப்படாததால் வெளிவரவில்லை என்று ஆர்குட் பயன்படுத்தும் பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். இவற்றைத் தடுக்க எந்த வழியும் ஆர்குட்டில் இல்லை என்பதால் பல முன்னெச்சரிக்கை வாதிகள் தங்கள் புகைப்படங்களுக்குப் பதிலாக ஐஸ்வர்ய ராயையோ, அமிதாப்பச்சனையோ துணைக்கு அழைக்கிறார்கள்.

ஆர்குட்டில் புகைப்படங்களையோ, தொலைபேசி எண்களையோ பயன்படுத்த வேண்டாம் என்கிறது காவல்துறை. ஆனால் இணையத்தில் நண்பர்களை நிஜமான அக்கறையுடன் தேடுபவர்களுக்கு இந்த தகவல்கள் மிகவும் இன்றியமையானவையாக இருக்கின்றன. வேலை வாங்கித் தருகிறேன் என்று இயங்கும் நூற்றுக்கணக்கான வலைத்தளங்களில் தொலை பேசி எண்களைத் தருகையில் ஆர்குட்டில் தருவதில் தவறில்லை எனும் வாதங்களும் எழுகின்றன.

புகைப்பட நிலையங்களோ, செல்போன் கேமராக்களோ யாருடைய புகைப்படத்தை வெண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனும் அபாயம் தற்போதைய சூழலில் நிலவுகிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. தினசரி நாம் எதிர்கொள்ளும் கிரெடிட் கார்ட் தேவையா, வீட்டு கடன் தேவையா, வேலை தேவையா எனும் தொலைபேசி அழைப்புகளே, நம் தொலை பேசி எண்கள் நம் அறிவுக்கு எட்டாமலேயே பல இடங்களில் பதிவாகி இருக்கின்றன என்பதற்குச் சான்று.

ஆர்குட்டில் பாலியல் தவறுகளை ஊக்குவிக்கும் செயல்கள் பல நடக்கின்றன. அதற்காகவே இயக்கும் குழுக்களில் ஏராளமான பெண்களின் புகைப்படங்களும், தகவல்களும் காணக்கிடைக்கின்றன என்பது அதிர்ச்சியான செய்திகளில் ஒன்று. டேட்டிங் என்னும் பெயரில் இயங்கும் நூற்றுக்கணக்கான குழுக்கள் மாநில வாரியாக பெயர்களை வைத்துக் கொண்டு பாலியல் தவறுகளை நடத்தி வருவது எதிர்கால இளைஞர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் முக்கிய காரணியாய் விளங்குகிறது.

பாலியல் சார்ந்த இணைய தளங்களை துழாவுவது பெரும்பாலான நிறுவனங்களிலும், கல்லூரி வளாகங்களிலும் தடை செய்யப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் ஆர்குட் அதற்குரிய வசதியைச் செய்து தரும் விதமாக பல பாலியல் கதைகள், படங்கள், வீடியோக்கள் என குழுக்களை அனுமதித்திருப்பது நிறுவனங்களிலும், கல்வி நிலையங்களிலும் செயல்படும் ஆர்குட் பயன்பாளர்களின் நேரத்தை விழுங்கி ஏப்பம் விடுகிறது.

ஆர்குட் யாருக்குப் பயன்படுகிறதோ இல்லையோ அதை உருவாக்கியவருக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரிக்குவிக்கிறதாம். தற்போது கணினி துறையில் டாக்டர் பட்டத்துக்காய் முயன்றுவரும் இவருக்கு ஆர்குட் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தை நினைத்துப் பார்த்தால் தலை மட்டுமல்ல, முழு உடலுமே சுற்றுகிறது.  2009ல் உலகின் பணக்காரர்களில் ஒருவராக மாறிவிடுவார் என்று கணிக்கப்பட்டுள்ள இவருக்கு தினசரி 20,000 புதிய நண்பர்கள் சேர்கிறார்களாம். 85ஆயிரம் தகவல்கள் இவருக்காய் தினசரி காத்துக் கிடக்கிறதாம் சுமார் 25 பேரை இதற்காகவே நியமித்திருக்கிறாராம் ஆர்குட்.

ஒருவர் ஆர்குட்டில் இணையும்போது இவருக்கு பன்னிரண்டு டாலர்களும், யாரோ யாரையோ நண்பராய் இணைக்கையில் பத்து டாலர்களும், அதற்கு அடுத்த நிலை நண்பர் இணைகையில் எட்டு டாலர்களும் என யாரோ எங்கோ ஆர்குட்டில் செய்யும் பயன்பாட்டிற்கு ஏற்ப இவருக்கு பணம் கொட்டுகிறது. ஒரு புகைப்படத்தை ஆர்குட்டில் இணைக்கையில் இருநூறுடாலர்கள், யாராவது ஒரு செய்தி அனுப்புகையில் ஐந்து டாலர்கள் , தளத்தை விட்டு வெளியே வருகையில் ஒரு டாலர், என்று எல்லா சிறு சிறு செயல்களுக்கும் இவருக்குக் கிடைக்கும் பணத்தை நினைத்துப் பார்த்தால் இவருடைய ஒரு நாள் வருமானமே ஒரு நாட்டின் வறுமையைப் போக்க இயலும் என்று தோன்றுகிறது. ஆனால் ஆதாரபூர்வமாக கூகிள் நிறுவனமோ, ஆர்குட்டோ  இதை வெளியிடவில்லை. இந்த தகவல்கள் இணையத்தில் உலவிக் கொண்டிருக்கின்றன.

மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த வாழ்க்கையில் பயன்களும், பிரச்சனைகளுமாகவே அனைத்து நிகழ்வுகளும் இருக்கின்றன. எதையும் சரியானவற்றுக்காய் சரியான விதத்தில் பயன்படுத்துகையில் மனித குலம் பயன்களைப் பெற்றுக் கொள்கிறது. தவறுகளை நோக்கி நகர்கையில் அனைத்து கண்டுபிடிப்புகளும், புதிய விஷயங்களும் அதன் அர்த்தத்தை இழந்து விடுகின்றன. கனியிருக்கக் காய்கவர்ந்தற்று என்று தான் ஆர்குட் பயன்பாட்டாளர்களையும் பார்த்துச் சொல்லத் தோன்றுகிறது.

 (நன்றி :சேவியர், தமிழோசை)

CWEBWORLD

We Provide faster Internet services at very low cost. Visit for feel the power of speed.

Our cafes provide high speed Internet access in addition to which we have a range of complimentary services which are Included in the price.

• Scanning
• CD/DVD burning
• Web cams
• Media readers to download from your digital cameras.

We access Internet through ISDN (Integrated Services Digital Network) and share it with our PCs, networked via LAN (Local Area Network) at the speed of 10 mbps, we are using latest technology devices which are responsible for high speed, such as Routers, Switches and Hubs.


Our PCs all come with MS office, Yahoo, ICQ, MSN, Skype and a host of other software.


Speakers / headphones, Microphones, Web-Cams, are connected with every system, to ful-fill your audio-visual needs.


Personal cabins with AC facility are also available for your safety, security, privacy and comfort.


Our other services include high quality Black & white & colour printing, scanning.


You can connect your laptops in the cafes either by Wireless or using your Ethernet card.

This is not only a cyber cafe but its a good sales & service center and Development center and everything for computer field you are looking for. Contact us for computer assembling, software installation, troubleshooting, networking, software & web-development etc.

Our staffs are every time ready for your service.
We pride ourselves on our customer service so if you need help please let us know and we will be more than happy to assist-that’s what we are here for!!!

PRICE

CWEBWORLD Internet Cafe provide our services at very competitive rates.
Listed below are is a sampling of our price list:

INTERNET ACCESS:

Per Hour                      Rs.20/-
30 min                          Rs.10/-

PRINTING

A4 Black & White          Rs.3.00
A4 Colour                     Rs.8.00
Legal Black & White     Rs.4.00
Legal Colour                Rs.12.00

SCANNING

A4                                Rs.10.00

20% Discount when you print more than 99 pages!

CD/FLOPPY DISKS

CDR                              Rs.9.00
CD-RW                                     Rs.20.00
DVD                              Rs.22.00
DVD-RW                       Rs.40.00
Floppy Disks                 Rs.10.00

CD/DVD BURNING

CD                                Rs.10.00
DVD                              Rs.30.00*

GENERAL OPENING HOURS

Monday – Sunday, 8.00am – 10:30pm


Please phone us to confirm availability
times on 4353 8595.

CONTACT US

CWEBWORLD
Internet Information Super Highway

194/8, Asiad Colony,
Anna Nagar West,
Chennai – 600 101.
Ph:044 – 4264 5746, 4353 8595
Email : cwebworld@gmail.com

Useful Websites – 1